ஆசிரியர் குறிப்பு

உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் இன்புற்று வாழ, இயற்கை மட்டுமே நம்மை காக்கும் கடவுள் என்பதை இந்த உலகிற்க்கு உணர்த்த இத்தளத்தை நிறுவுகிறேன். நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் இயற்கைலிருந்து பெறபட்டவையாகும். ஆனால், இன்றைய தலைமுறையினர்  விவசாயத்தில் வேதியல் மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்கள் மற்றும் காய்கனிகளை உற்பத்தி செய்கின்றனர். அந்த உற்பத்தி பொருட்களை மேலும் வேதியல் மாற்றம் செய்யப்பட்ட உணவுகளாக மாற்றி அவற்றை உட்கொள்ள வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

மிக சிறந்த வசிப்பிடம் கட்டி வாழும் நம் மனித குலத்திற்கு ஏன் இத்தனை விதமான நோய்கள் வருகிறது ? ஆனால், இருப்பிடம் இல்லாமல் அரை வயிறு சாப்பிட்டு வாழும் பறவைகள், விலங்குகள்  மற்றும் பிற உயிரினங்கள்  எந்த நோய்யும் தாக்காமல் உள்ளதே அதற்கு காரணம் என்ன? என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? மனிதன் வாழ அடிப்படை தேவைகள் உணவு, உடை, உறைவிடம் மட்டுமல்ல தூய காற்றும், நீரும் மனித உடல் உறுப்புகளுக்கு இன்றியமையாதது. என் குரு திருமூலரின் வாக்கின் படி உணவே மருந்து என்பது பொய்யா வாக்கு. இன்று மருத்துவம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் சுயநலவாதிகளின் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டு வரவும், உலக மக்களை  துன்பதிலிருந்து விடுபட்டு இன்புற்று வாழவும் இத்தளத்தை அற்பணிக்கிறேன்.

இங்கனம்

PK
இயற்கை விஞ்ஞானி

%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-vel-pari-venthan-unavemarunthu-com-2