வெண்ணைப்பழதின்  மருத்துவ குணங்கள் (Avocado Medical Benefits)

அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் வெண்ணெய் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி images-1மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும், இதில் மிகவும் அதிகமான கொழுப்புச் சத்தும் உள்ளது. அதிகமான கலோரிகளை கொண்டுள்ள பழமாகவும் இது உள்ளது. இதில் உள்ள கொழுப்புச்சத்து, இயற்கையாகவே தனித்து செறிவூட்டப்படுவதால் உடலுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளது.

இது போன்ற புரோட்டீன், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஆகிய பல்வேறு சத்துக்கள் உள்ளதால் வெண்ணெய் பழத்தில் மிகவும் அதிகமான பலன்கள் உள்ளன. மிகவும் நன்மை பயக்கும் பழங்களில் ஒன்றான இதில், சில நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளன. அது போன்று வெண்ணெய் பழம் தீர்க்கும் நோய்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

எடை அதிகரிப்பவர்களுக்காக – வெண்ணெய் பழத்தில் அதிக கலோரியும், கொழுப்பும் உள்ளதாக முன்னர் குறிப்பிட்டோம். எனவே, எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக இது உள்ளது. வெண்ணெய் பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் நல்ல அளவில் உள்ளன. 100 கிராம் வெண்ணெய் பழத்தில் 60-80 கலோரிகள் உள்ளன. எனவே, தங்களுடைய எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாக வெண்ணெய் பழம் உள்ளது

இதயத்திற்கு ஏற்றது – இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருக்கும் பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை வெண்ணெய் பழத்தில் அதிகளவில் உள்ளன. எனவே, இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கும் பழமாகவும் உள்ளது.

தோலுக்கு ஏற்றது – வெண்ணெய் பழ எண்ணெய் தோலின் அமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த உதவும் மிகச்சிறந்த எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது. இந்த எண்ணெயை காய்ந்திருக்கும் தோலில் போட்டு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தோலில் உள்ள வறண்ட பகுதிகள் பளபளப்பு பெறுவதோடு, மீண்டும் அழகுற காட்சியளிக்கும். எனவே தான், வெண்ணெய் பழ எண்ணெயை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது – மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால் வெண்ணெய் பழம் இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் கொழுப்புகள் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. எனவே தான், வெண்ணெய் பழம் குறைவான சர்க்கரை உள்ளவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.

வலி நிவாரணி – மூட்டு வலிக்கு முதன்மையான மருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. இதிலுள்ள எரிச்சலை தடுக்கும் பொருட்கள், மூட்டுகள் இணையும் இடத்தல் வரும் வலியைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. வெண்ணெய் பழத்தில் உள்ள கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்களுக்கு வலியை நீக்கும் தன்மைகள் உள்ளன. நெடுங்காலமாக இருக்கும் உடல் வலிகளையும் கூட வெண்ணெய் பழ எண்ணெய் மசாஜ் மூலம் குணப்படுத்த முடியும்.

இவையெல்லாம் வெண்ணெய் பழத்தின் பலன்கள் பற்றிய சில தகவல்கள் மட்டுமே. மூப்படைவதை தள்ளிப் போடுவதற்கும், இளமையான தோற்றத்திற்கும் கூட வெண்ணெய் பழம் உதவுகிறது. புற்றுநோயை தவிர்க்கவும் மற்றும் நீரிழிவை கட்டுப்படுத்தவும் வெண்ணெய் பழம் உதவுகிறது. இதயம், தோல் மற்றும் தசைகள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும் சிறந்த நிவாரணியாக வெண்ணெய் பழம் கருதப்படுகிறது.

Leave a Reply