கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits)

இந்தா கோதுமை நொய் கஞ்சி, குடி! சுரம் வந்தவுகளுக்கு இந்த கஞ்சி நல்ல மருந்து!”. அந்த கோதுமை நொய் கஞ்சியை குடித்ததும் சற்று கூடுதல் புத்துணர்ச்சி கிடைத்தது.

“கோதுமையில சப்பாத்தியை தவிர எனக்கு வேறெந்த பதார்த்தமும் தெரியாது! கோதுமையில e71e7-htஇப்போதான் கஞ்சி குடிக்குறேன்.

கோதுமையோட மருத்துவ பயன்கள் என்னென்னனு சொல்லுங்க பாட்டி!

கோதுமைக் கஞ்சி , கோதுமை அடை உடலுக்கு பலத்தைக் குடுக்கும். கோதுமை நொய் கஞ்சி, காய்ச்சலால் இழந்த பலத்தை மீட்டெடுக்கும்.

அசிடிட்டி, அஜூரணம் உள்ளவங்களுக்கு கோதுமை ரவைக் கஞ்சி நல்ல பலன் தரும். கபம் நோய் உள்ளவங்க ‘கோதுமைப் பால்’ செஞ்சு குடிச்சா ரொம்ப நல்லது.

கெமிக்கல், உலோகம் சம்பந்தமான தொழில்ல இருக்குறவங்க தொழிற்சாலை நஞ்சு உடல்ல கலந்துருச்சுன்னா, கோதுமை மாவை நீர்ல கலந்து குடிச்சு வந்தா, நல்ல பலன் கிடைக்கும். இதெல்லாம் உட்பிரயோக பலன்கள்.

கோதுமைய உடல்ல வெளிப்பிரயோகமாவும் பல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்!

கோதுமை மாவை காடியில் (Vinegar) கலந்து பூசினா வியர்க்குரு குணமாகும்.

கோதுமை மாவை களியா செஞ்சு சுளுக்கு உள்ள இடத்துல கட்டினா வலி குறையும்.

அக்கி, நெருப்பு பட்ட இடம், மேல்தோல் உரிஞ்ச இடத்தில எல்லாம் கோதுமை மாவ பூசி வந்தா, அந்த இடத்துல உள்ள எரிச்சல் தணியும்.

நெஞ்சு சளிக்கும் கப பிரச்சனைக்கும் கோதுமை தவிட ஒற்றடமா உபயோகிச்சா நோய் வீரியம் குறையும்.

எனக்கு மட்டும் பிரத்யேகமாக பாட்டி கூறிய அந்த அழகுக்குறிப்பை வீட்டில் சென்று செய்து பார்க்க மும்முரமானேன். சரி…

இப்போது உங்களுக்கும் அதை சொல்லிவிடுகிறேன்! கோதுமை மாவுடன் பச்சைப் பயறு மாவும் தயிரும் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தபின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்திலுள்ள மாசு மறையும்.

கோதுமையை வறுத்து, அதோடு தேன் கலந்து 1 கிராம் வீதம் இருவேளை சாப்பிட மூட்டுவலி தீவிரம் குறையும்!

கோதுமைப் பால் செய்யும் முறை:

30 கிராம் கோதுமை நொய்யை முந்தின நாளே நீரில் ஊற வைத்து, காலையில் நன்றாய் அடித்து பசையாக்கி, மெல்லிய துணியால் வடிகட்டி பிழிந்தெடுத்தால் ‘கோதுமைப்பால்’ கிடைக்கும்.

Leave a Reply