பாகற்காய் மருத்துவ குணங்கள் (Bitter Gourd Medical Benefits)

paakarkaiபாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும்.

சுவாச கோளாறுகள்:
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

கல்லீரல் பிரச்சனைகள்:
தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி:
பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பருக்கள்:
உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு:
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மலச்சிக்கல்:
மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

ஆரோக்கியமான சிறுநீரகம்:
பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதய நோய்:
பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

புற்றுநோய்:
பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

எடை குறைவு:
பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் தண்ணீர் 80-85% சதவீதம் உள்ளதால், இதனை உட்கொண்டால், வயிறும் விரைவில் நிறைந்துவிடும்.

Leave a Reply