பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் (Ash Gourd Medical Benefits)

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள் காpumpkinnல்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. பூசணிக்காயின் விதைகளில் உள்ள ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் ஆகியவைகள் புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது. செல் இறப்பிலிருந்து பாதுகாக்கும்.

நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு:
வெண் பூசணிச்சாறு ரத்தத்தைக் கட்டுபடுத்தக் கூடியது. பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் நுரையீரல் சம்பந்த நோய்கள் தீரும்.

வயிற்றுப் பூச்சிகளை கொல்லும்:
பூசணிக்காய் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை கொல்லக் கூடியது. மூலத்திற்கும் மருந்தாக பயன்படக் கூடியது மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்  ஆயுர் வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.

மலச்சிக்கலை குணப்படுத்தும்:
பூசணிக்காய் எலும்புகள் பலவீனமாவதை தடுக்க உதவுகிறது. இதில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து சீரண உறுப்புகளுக்கு பலத்தை தந்து மலச்சிக்கல் உண்டாகாதவாறு உதவி செய்கிறது.

தலைவலி பிரச்சனையை குணப்படுத்தும்:
வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் நோய்களையும் போக்கும். சிறு நீரக பாதிப்பிற்கு வெண்பூசணி வேர் மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் பையின் அடைப்போ அல்லது எரிச்சலுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. அதோடு அடிக்கடி சிறு நீர் கழிக்க வேற்ண்டுமென்ற உணர்விற்கும் மருந்தாக பயன்படுகிறது.

புதிய செல்கள் உற்பத்தி:
வெண்பூசணிக் கொடியின் தண்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

இதயக் கோளாறுகளை குணப்படுத்தும்:
பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால் இது அதிக ரத்த அழுத்தத்தையும் அதனால் ஏற்படக் கூடிய இதயக் கோளாறுகளையும் தடுக்க வல்லது. பூசணிக்காயில் துத்தநாகம் சத்து மிகுதியாக உள்ளது.

Leave a Reply