யோகா

யோகா

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். “யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.”

ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.

யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.

Leave a Reply