வெண்டக்காயின் மருத்துவ குணங்கள் (Ladays Finger Medical Benefits)
| முலிகையின் பெயர் | வெண்டை |
| தாவரவியல் பெயர் | ABELMOSCHUS ESCULENTUS |
| தாவரவியல் குடும்பம் | MALUACEAE |
| வேறுபெயர்கள் | BINDI, GOMBO, OKRA, LADAY’S FINGER |
| மருந்தாகும் பாகங்கள் | இலை, காய், விதை மற்றும் வேர் |

ஒரு கப் பச்சை வெண்டைக்காயில் கலோரி -30 நார்சத்து -3கிராம் ப்ரொட்டீன் -2 கிராம் கார்போஹைட்ரேட் -7.6 கொழுப்பு -0.6 க் விட்டமின் சி -21 மில்லி கிராம் மெக்னீசியம் -60 மி.கிராம்ஆஸ்த்மா, கொலெஸ்ட்ரால், கிட்னி பாதிப்பு, ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.மேலும் நோய் எதிர்ப்புதிறனை அதிகரிக்கச் செய்கிறது. சிறு நீரக நோயிலிருந்து காப்பாற்றுகிறது: சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு கிட்னி பாதிக்கும் அபாயம் உண்டு. வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடும்போது சர்க்கரை வியாதி இருப்பவரகளுக்கு வரும் சிறு நீர் கோளாறினை தடுக்க முடியும். கிட்னி தொடர்பாக வரும் எந்த வியாதியும் அண்டாது என்ற மகிழ்ச்சியான செய்தியை 2005 ஆம் ஆண்டு ஒரு மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. கர்ப்பகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும்: வெண்டைக்காயில் ஏ, பி1, பி2, பி6 மற்றும் சி ஆகிய விட்டமின்களும் , நார்சத்தும் உள்ளன. இவை கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு வரும் பிறழ்தல் தொடர்பான நோய்களை தடுக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.அதுமட்டுமில்லாமல் வெண்டைக்காய் நிறைய நோய்கள் வராமல் தடுக்கிறது. பெருங்குடலில் வரும் புற்று நோயைத் தடுக்கிறது. உடல் பருமனைக் குறைக்கும். சருமத்தை அழகாக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கையில் மட்டும்தான் உள்ளது. தீயவற்றை ஒதுக்கி , இப்படி எல்லாவிதத்திலும் நன்மை தரும் வெண்டைக்காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.ஆரோக்கியம் மேம்படும்.
வரலாறு:
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள்.
வகைகள்:
இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.
உணவுச் சத்து:
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.


