பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)

பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அதிலும் 1பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

மேலும் ஒரு பௌல் வேக வைத்த பச்சை பயிறில் 100 கலோரிகளுக்கு மேல் இருக்காது. மேலும் பச்சை பயறு உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. சரி, இப்போது பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பார்ப்போமா!

எடையைக் குறைக்கும்
பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஒரு விஷயம் தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான். எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

இரும்புச்சத்து வளமாக உள்ளது
நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.

சரும புற்றுநோய்
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பது தெரியுமா? ஆம், அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Leave a Reply