அரிப்பு நோய்

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் ringworm-300x246-615x504தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம்.

உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து உருவாகும்.

ஆகவே கொசு கடிக்கும் போது, எரிச்சலை உண்டாக்கும் அரிப்பிலிருந்து விடுதலை பெற இதோ சில ஆரோக்கியமான வழி முறைகள் உள்ளன. இவை அதிகமாக நாட்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்ற நாட்டு வைத்தியக் குறிப்புகள் ஆகும்.

இவற்றில் அறிவியல் ரீதியான ஆதாரங்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பலரும் பயனடைந்துள்ளனர். ஆகவே கொசுக்கடியால் அவஸ்தைப்படுவதற்குப் பதிலாக, இவற்றை பின்பற்றுவதன் மூலம் சுகம் பெறலாம்.

பொதுவான அரிக்கும் தோலழற்சியின் வகைகள்.

மரபுவழி அரிப்புத் தோலழற்சி (Atopic eczema) (குழந்தைக்குரிய அரிப்புத் தோலழற்சி, சந்திப்புகளுக்குரிய அரிப்புத் தோலழற்சி, மரபுவழி அரிப்புத் தோலழற்சி என்றும் அழைக்கப்படும்) என்பது ஒரு ஒவ்வாமை வியாதியாகும். இது ஈழைநோய் (Asthma) இருக்கும் ஓர் உறுப்பினரின் குடும்பத்தில் மரபுக்கூறைக் கொண்டியங்கும் எனவும் நம்பப்படுகிறது. அரிப்புடன் கூடிய தடிப்பு, அதுவும் குறிப்பாக தலை, தலையின் தோல் பகுதி, கழுத்து, கை மூட்டுகளின் உள்பக்கம், கால் முழங்கால்கள் மற்றும் பிட்டங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும். எரிச்சலூட்டும் தொடர்பு ஒவ்வாமையின் போது தேவையற்ற கூறுகளை அகற்றும் செயலின் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பொதுவாகக் காணப்படுகிறது.

அன்னியப்பொருள் தொடர்பு தோலழற்சி (Contact dermatitis) இரு வகை உண்டு: ஒவ்வாமை கொண்டது (நஞ்சுப் படர்க்கொடி அல்லது நிக்கல் போன்ற ஒவ்வாமைப் பொருள்களுடன் தொடர்பு ஏற்பட்டு சிறிது காலம் கழித்து ஏற்படும் எதிர்வினையினால் உருவாவது) மற்றும் எரிச்சலூட்டுவது [உதாரணமாக, சோடியம் உப்பு (sodium lauryl sulfate) சலவைத்தூள்களின் நேரடி தொடர்பினால் ஏற்படுவது). சில பொருள்கள் ஒவ்வாமைப் பொருளாகவும் அதே சமயம் எரிச்சலூட்டுபவையாகவும் உள்ளன (எடுத்துக்காட்டுக்கு ஈர சிமெண்ட்). பிற பொருள்கள் சூரிய ஒளிக்குட்படுத்தப்பட்ட பின்னர் சிக்கலை ஏற்படுத்துகின்றன, இதனால் விளைவதே ஒளிநச்சு சருமவழலாகும். தொடர்பு அரிக்கும் தோலழற்சி நோய்களில் முக்கால் பங்கு நிகழ்வுகள் எரிச்சலூட்டும் வகையைச் சேர்ந்தவையே ஆகும். இவையே பொதுவான தொழில்வழி தோல் வியாதியாக உள்ளது. தொடர்பு அரிக்கும் தோலழற்சி குணப்படுத்தக்கூடியதாகும், ஆனால் பாதிப்பை ஏற்படுத்திய பொருளைத் தவிர்க்கவும் ஒருவரது சூழலிலிருந்து அதனையும் அதன் தடத்தையும் அகற்றவும் முடியும் என்ற நிலை அவசியம்.

உயிர்ச்சத்து குறை அரிப்புத் தோலழற்சி (Xerotic eczema) [வறட்சித் தோல் நோய் (asteatosis), அடர்வுத் தோல் வெடிப்பு (craquele), குளிர்கால நமைச்சல், அதீத நமைச்சல் குளிர்ச் சூழல் தோலழற்சி (pruritus hiemalis) என்றும் அழைக்கப்படும்] வறண்ட சருமம் ஆகும், அது பின்னர் தீவிரமடைந்து அரிப்புத் தோலழற்சியாக மாறும். அது குளிர்காலத்தில் மிகவும் மோசமாகிறது, பெரும்பாலும் இதனால் கை கால் மற்றும் உடல் பகுதி ஆகியவை பாதிக்கப்படுகின்றன. நமைச்சலும் தொந்தரவும் உள்ள தோலானது வறண்ட, வெடிப்புகளுடன் கூடிய ஆற்றுப் படுகையைப் போலவே காணப்படும். இந்தக் குறைபாடானது வயது முதிர்ந்த மக்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பிறவிஉலர்தோல் (Ichthyosis) என்பது இதனுடன் தொடர்புடைய ஒரு குறைபாடாகும்.

எண்ணெய்ச்சுரப்பு மிகைப்பு சருமவழல் (Seborrhoeic dermatitis) அல்லது ஊறல் தோலழற்சி (Seborrheic dermatitis) [குழந்தைகளுக்கு வரும் மண்டைத் தோல்தடிப்பு (cradle cap)] என்பது சில நேரங்களில் அரிப்புத் தோலழற்சியின் ஒரு வகையாக வகைப்படுத்தப்படுகிறது, மேலும் அது பொடுகு (இலங்கை வழக்கு:சொடுகு) வியாதியுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. இதனால் மண்டையில், முகத்தில் மற்றும் சில நேரங்களில் உடலில் வறண்ட வழவழப்பான தோலுரிதல்கள் ஏற்படுகின்றன. மண்டைத் தோல் தடிப்பின் தீவிர நிலையாகாதவரை இந்த நிலையானது தீங்கற்றதாகும். பிறந்த குழந்தைகளில் இதனால் தடித்த, மஞ்சள் நிற சொரசொரப்பான மண்டைத் தோல் தடிப்புகள் உருவாக இது காரணாகிறது. இது பயோட்டின் குறைபாட்டுடன் தொடர்புடையதாகவும், பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

பொதுவாகக் காணப்படாத அரிக்கும் தோலழற்சிகள்:
வியர்வைக்கட்டி (Dyshidrosis) (சுவேதனக்கேட்டு அரிக்கும் தோலழற்சி, குமிழ்வு (pompholyx) அல்லது விரல் ஒரங்களில் கொப்புளம்), கொப்புள உள்ளங்கை, உள்ளங்கால் தோலழற்சி (vesicular palmoplantar dermatitis), இல்லத்தரசியின் அரிக்கும் தோலழற்சி (housewife’s eczema) என்றும் அழைக்கப்படுகிறது) உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மற்றும் கை விரல்கள் மற்றும் கால் விரல்களின் உட்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஒளி ஊடுருவக்கூடிய தன்மை கொண்ட வீக்கங்கள் நீர்மக் கொப்புளங்கள் என அழைக்கப்படுகின்றன, தடித்தல், வெடிப்புகள் ஏற்படுதல்களுடன் இரவில் மிகவும் அதிகரிக்கும். நமைச்சலும் இருக்கக்கூடும். கை அரிக்கும் தோலழற்சியின் ஒரு பொதுவான வகையான இது வெப்ப காலங்களில் மிகவும் மோசமாகிறது.

வட்டுருவஅரிக்கும் தோலழற்சி (Discoid eczema) [வட்டவில்லை தோலழற்சி (nummular dermatitis), கசிஅரிப்புத் தோலழற்சி (exudative eczema), நுண்ணுயிரிய அரிப்புத் தோலழற்சி (microbial eczema) எனவும் அழைக்கப்படுகிறது] என்பதில் கசியும் தன்மை கொண்ட அல்லது வறண்ட வட்ட வட்டப் பகுதிகள் ஏற்படும், அவை தெளிவான ஓரங்களைக் கொண்டிருக்கும். இவை பொதுவாக கீழ்க்கால்களில் ஏற்படும். வழக்கமாக இது குளிர்காலத்தில் மிகவும் மோசமாகிறது. இதற்கான காரணம் அறியப்படவில்லை, மேலும் இது வந்து வந்து போகும் போக்கைக் கொண்டுள்ளது.

நரம்பிய அரிப்புத் தோலழற்சி (Venous eczema) [புவியீர்ப்பு அரிப்புத் தோலழற்சி (gravitational eczema), மந்தச் சருமவழல் (stasis dermatitis), சிரைத் தளர்ச்சி அரிப்புத் தோலழற்சி (varicose eczema) என்றும் அழைக்கப்படும்] இரத்த சுழற்சி பலவீனமாக உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது, மேலும் பொதுவாக இது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணுக்கால் பகுதியில் ஏற்படுகிறது. தோலில் சிவப்பு நிறப் பகுதிகள், அளவில் மாற்றங்கள், கருத்தல் மற்றும் நமைச்சல் ஆகியவை ஏற்படும். இந்தக் குறைபாடானது கால் புண்களுக்கு முந்தைய நிலையாக இருக்கலாம்.

அக்கி அம்மை (Dermatitis herpetiformis) [துரிங் வியாதி (Duhring’s Disease) எனவும் அழைக்கப்படும்] என்பது அதிக நமைச்சலையும் பொதுவாக கைகள், தொடைகள், முழங்கால்கள் மற்றும் முதுகில் ஒத்த தடிப்புகளையும் ஏற்படுத்தும். அது குளூட்டன் ஒவ்வாமை (செலியாக் வியாதி) யுடன் நேரடி தொடர்புடையதாகும். மேலும் இதை சரியான உணவுப்பழக்கத்தால் தீர்க்க முடியும், இது இரவில் மிகக் கடுமையாக தொந்தரவளிக்கும்.

நரம்பியச் சருமவழற்சி (Neurodermatitis) [லிச்சென் சிம்ப்ளெக்ஸ் கிரோனிக்கஸ் (LSC), இடமறியப்பட்ட அரிப்பு சருமவழற்சி எனவும் அழைக்கப்படுகிறது] என்பது அரிக்கும் தோலழற்சிப் பகுதியில் தேய்த்தல் மற்றும் சொறிதல் பழக்கம் இருப்பதால் ஏற்படும் தோல் தடித்தல், நமைச்சல் மற்றும் நிறமாற்றம் ஆகும். பொதுவாக ஒரு இடத்தில் மட்டுமே காணப்படும். பெரும்பாலும் இது, பழக்கவழக்க மாற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துண்ணல் ஆகியவற்றினால் குணப்படுத்தக்கூடியதாகவே உள்ளது. உருண்டையாக்கும் சொறி (Prurigo nodularis) என்பது பல தடிப்பு வீக்கங்கள் காணப்படும் மற்றொரு தொடர்புடைய குறைபாடாகும்.

தானாய் அரிக்கும் தோலழற்சியாதல் (Autoeczematization) [படர்தாமரை (id reaction; Dermatophytide reaction), சுயத்தூண்டல் (autosensitization) என்றும் அழைக்கப்படுகிறது] என்பது ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள், நுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளின் நோய்த்தாக்கத்தின் பதில்வினையாக ஏற்படும் அரிக்கும் தோலழற்சி நிலையாகும். இதற்கு காரணமாக இருந்த நோய்த்தாக்கத்தின் தோற்றத்தைக் கண்டு அதை சுத்தம் செய்வதன் மூலம் இதை முழுமையாக குணப்படுத்த முடியும். இதன் காரணத்தைப் பொறுத்து இதன் தோற்றம் மாறுபடுகிறது. இது வழக்கமாக நோய்த்தாக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவிலேயே காணப்படுகிறது.

அரிக்கும் தோலழற்சியுடன் நச்சுயிரிகளின் நோய்த்தாக்கங்கள் (ஹெர்பெட்டிக்கம் அரிக்கும் தோலழற்சி, வேக்சினேட்டம் அரிக்கும் தோலழற்சி) மற்றும் உள்ளிருக்கும் வியாதியினால் உருவாகும் அரிக்கும் தோலழற்சிகள் [எ.கா. வடிநீரகப்புற்று (lymphoma)] ஆகியவை சேர்ந்து இருக்கும் நிலைகளும் உள்ளன. மருந்துகள், உணவுகள் மற்றும் வேதிப்பொருள்கள் ஆகியவற்றை உட்கொள்வதால் ஏற்படும் அரிக்கும் தோலழற்சிகள் இதுவரை முறைப்படுத்தப்படவில்லை. இங்கே பட்டியலிடப்பட்டவற்றுடன் இன்னும் சில பிற அரிதான அரிக்கும் தோலழற்சி குறைபாடுகளும் உள்ளன.

ஆல்கஹால் :

பீர் அல்லது மற்ற மதுவை அருந்துவதால், சருமத்தில் ஏற்படும் அரிப்பை மறந்து விடலாம். ஆனால் இந்த வகையான ஆல்கஹாலைப் பற்றி இங்கு பேசவில்லை. முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ஆல்கஹாலை எடுத்து, கொசுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து சுத்தம் செய்வதால், அரிப்புத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஒருவேளை ஆல்கஹால் இல்லாவிட்டால், சோப்புத் தண்ணீரால் கழுவுவதன் மூலம் பயன் பெற முடியும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ஆன்டி இச், ஆன்டிபயோட்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துங்கள். ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

ஐஸ் கட்டி :

சரும அரிப்பு காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சரும மதப்பு தன்மையைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி பெரிதும் உதவும். அதிலும் கொசுக்கடி அதிகமாக இருக்கும் சமயத்தில், மிகவும் குளிர்ச்சியான தண்ணீரில் குளியுங்கள் அல்லது குளிர்ச்சி நிறைந்த தண்ணீருள்ள குளத்தில் மூழ்கிக் குளியுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் விட்ச் ஹாசில் :

செலவில்லாத கொசுக்கடித் தீர்வுக்கு, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்து, கொசுக்கடி ஏற்பட்ட பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விடவும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள ஒரு காரத்தன்மையான (அல்கலைன்) பதார்த்தம் இருப்பதால், இது சருமத்தின் பிஎச் அளவை நடுநிலைப்படுத்த உதவி, வீக்கம் குறைய வாய்ப்புண்டு. விட்ச் ஹாசில் கிடைக்காவிட்டால், அதற்குப் பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம்.

டீட்ரீ ஆயில் :

இது வீக்கத்தைக் குறைக்கும் ஒரு இயற்கை மருந்து என்பதால், பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் நச்சுப் படலம் ஆகியவற்றுக்கு சிறந்தது. அதிலும் சொரிவதால் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைப்பதற்கும், நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும் இந்த எண்ணெய் உதவும்.

டூத் பேஸ்ட் :

கொசுக்கடியால் சருமத்தில் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்கள் ஏற்பட்டால், அதன் மீது கொஞ்சம் டூத் பேஸ்ட் தடவுங்கள். இதனால் அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

உப்பு :

கொசுக்கடியிலிருந்து சீக்கிரம் நிவாரணம் பெறுவதற்கு, உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்சலடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

கற்றாழை :

சொரியும் போது சருமத்தில் கீறல்கள் ஏற்பட்டு வலி உண்டாகும். ஆனால் கற்றாழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை, இந்த வேதனையிலிருந்து சுகம் பெற உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :

குளியல் தொட்டி நீரில், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குளிப்பதால், வெயிலால் ஏற்படும் எரிச்சல் குறைவது மட்டுமன்றி, இதில் இருக்கும் ஒருவகை ஆசிட் சரும அரிப்பைத் தணிப்பதற்கும் வழி செய்யும். ஒருவேளை தண்ணீரில் கலந்து குளிக்க முடியாவிட்டால், ஒரு காட்டன் உருண்டையில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவுவதால் பயன் பெறுவீர்கள்.

வாழைப்பழத் தோல் :

வாழைப்பழத் தோலில் உள்ள இனிப்புப் பகுதி கொசுக்கடியிலிருந்து நிவாரணம் பெற உதவும். எனவே வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்ப்பதால் சுகம் பெறுவீர்கள்.

எச்சில் :

விரலில் சிறிது எச்சிலைத் தொட்டு, அதை கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக தடவி உலரவிட்டாலும் சுகம் கிடைக்கும்.

உள்ளங்கையால் லேசாக அடித்தல் :

இது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம். ஆனால், கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக அடிக்கும் போது, மூளை நரம்புகளுக்கு வலி எது? அரிப்பு எது? என்ற குழப்பம் ஏற்படுவதால், அரிப்பிலிருத்து சுகம் பெற முடியும்.

அரிப்பு நோய் என்பது சராசரி வாழ் மனிதனை பாடாய் படுத்திவிடும். அதற்கு தகுந்த மருத்துவம் பார்க்காமல் இருந்து விட்டால் பக்க விளைவுகள் நம்மையே அழிக்கும் நிலைமைக்கும் கொண்டுபோய் விடும். அத்துடன் அரிப்பு நோயானது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.

மருந்தில்லா மருத்துவம் என்பது போல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை (மேற் கூறப்பட்டவை) தகுந்த அளவு முறையாக பயன்படுத்தி வந்தாலே அரிப்பு நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம்

Leave a Reply