ஆடாதொடையின்  மருத்துவ குணங்கள் (Adathodai Medical Benefits)

ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூaadaa-thoda மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா என்று கூறப்படுகிறது.ஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் 4 வேளை குடித்து வந்தால், நுரையீரல் ரத்த வாந்தி, கோழை மிகுந்த மூச்சு திணறல், இருமல், ரத்தம் கலந்த கோழை போன்ற வியாதிகள் குணமாகும்.இவற்றை சிறு குழந்தைகளுக்கு 5 சொட்டும், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 10 சொட்டும், பெரியவர்களுக்கு 15 சொட்டும் என அளவாக கொடுத்தால் போதும். ஆடாதொடையின் இலைச்சாற்றை 2 தேக்கரண்டி எடுத்து, அவற்றுடன் 1 டம்ளர் எருமைப் பாலை கலந்து 2 வேளை குடித்து வந்தால்<> சீதபேதி, ரத்த பேதி போன்றவை குணமாகும்.

இந்த இலையில் 10 எண்ணிக்கை எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து அவற்றை 2 வேளை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால், எலும்புருக்கி காசநோய் (டி.பி), ரத்த காசம், சளி காய்ச்சல், சீதள வலி, விலா வலி ஆகியவை குணமடையும்.ஆடாதொடையின் வேருடன் கண்டங்கத்திரியின் வேரையும் சம அளவில் எடுத்து, இடித்து பொடியாக்கி, 1 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை தேனில் கலந்து 2 வேளை தொடர்ந்து உட்கொண்டால் நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளி காய்ச்சல், எலும்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை நீங்கும்.ஆடாதொடையின் இலையையும் புதினா இலைகளையும் 1 கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி,லி.யாக சுண்ட காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடிக்கலாம். அப்படி செய்தால் கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை குணமாகும்.
உலர்ந்த ஆடாதொடை இலையை பொடி செய்து, ஊமத்தம் இலையில் சுருட்டி புகைபிடித்தால் மூச்சு திணறல் உடனே நிற்கும்.

ஆடாதொடை இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விசுணுகரந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் போன்றவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அவற்றை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்டர் அளவாக சுண்ட காய்ச்சி வடிகட்டி, 4 வேளைக்கும் 50 மி.லி. அளவு குடித்தால், எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.ஆடாதொடை வேரை 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி.லி.யாக காய்ச்சி வடிகட்டி குடித்தால், எல்லா விஷங்களும் முறிந்துவிடும். ஆடாதொடை இலையுடன் சிவனார்வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், கட்டி போன்ற உள்ரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி உள்ளிட்ட விஷங்களும் குணமாகும்.

ஆடாதொடை இலையுடன் வேப்பமர இலை, அரிவாள்மணை பூண்டு இலை, சிறியாநங்கை இலை போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து, நீண்ட நாள் புண்கள் மீது பற்று போட்டு வந்தால், அவை ஆறி, புண்கள் இருந்த தழும்புகளும் மறைந்துவிடும்.இதனுடன் குப்பைமேனி இலையையும் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால், இடுப்பில் பாவாடை நாடா மற்றும் அரைஞாண் கயிற்றினால் ஏற்பட்ட புண்கள் ஆறி, அவற்றின் கறுப்பு தழும்புகள் ஓடியே போய்விடும். ஆடாதொடை இலையை ஆவியில் வாட்டிய பின்னர், அதை சாறு பிழிந்து ஒரு டீ ஸ்பூனில் எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால், வறட்டு இருமலுடன் துப்பும் சளியில் ரத்தம் கலந்து வருவது உடனே நிற்கும். அத்துடன் 10 சொட்டு தூதுவளை இலையை சாறு பிழிந்து குடித்தால், சவ்வு போன்று இழுக்கும் இருமல் நீங்கும்.

ஆரைக் கீரையின்மகத்துவம் ஆரைக் கீரை என்பது, செங்குத்தாக வளரும் தண்டில் 4 கால்வட்ட இலைகளை கொண்ட மிகவும் சிறிய நீர் தாவர கீரை. தமிழகமெங்கும் உள்ள நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால் வரப்புகளில் தானே வளரும் குணமுடைய இந்த ஆரைக் கீரை மருத்துவ குணம் கொண்டது. நம் உடலில் சேரும் வெப்பத்தை நீக்கி, தாகம் தணிக்கும் குணம் கொண்டது. இவற்றை ஆராக் கீரை, ஆலாக்கீரை, நீருளாரை என்றும் அழைக்கிறார்கள். இந்த கீரை செவ்வாரை, புளியாரை, வல்லாரை, வறலாரை என்ற வகைகளாகவும் உள்ளது.இந்த ஆரைக் கீரையை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி, 30 கிராம் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி வடிகட்டி, பாலும் பனங்கற்கண்டும் கலந்து, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால், அதிக தாகம் போக்கும். சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதை தடுக்கும்.

Leave a Reply