தேன்

தேன்

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% – 18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது.

பயன்கள்:
சமையல், ரொட்டி தயாரிப்பு மற்றும் ரொட்டியின் மீது தடவப்படும் பரவல்,தேநீர் போன்ற பல்வேறு வகையான பானங்களுடன் கலக்கப்படும் கூடுதல் பானம், வணிக பானங்களில் சேர்க்கப்படும் ஒரு இனிப்பு என பல்வகைகளில் தேன் உபயோகமாகிறது. தேசிய தேன் வாரியத்தின் வரையறையின்படி ” தேன் என்பது ஒரு தூய்மையான பொருள். தூய தேனில் தண்ணீரோ வேறு இனிப்பூட்டும் திரவங்களோ கலக்கக் கூடாது.பொதுவாக தேன் விருந்து,தேன் கடுகு போன்ற துணை இனிப்புச் சாறுகள் வணிக உலகில் பிரபலமாக உள்ளன.

Leave a Reply