தோல் நோய்கள்

தோல் நோய்கள்

நமது சர்மத்தின் மேற்பரப்பில் பல நுண்ணுயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இவை உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு சர்மம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்ம முடியும், நகங்களும் நுண்ணுயிர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதில் உதவுகின்றன. சர்மத்தின் செல்கள் 30 நாளுக்கு ஒரு முறை “இறந்து” போய் புது செல்கள் உண்டாவதும், நுண்ணுயிர்களை அகற்ற உதவுகின்றது. செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கும் சர்ம எண்ணை “சீபம்”, பேக்டீரியா போன்ற கிருமிகளை தடுக்கும் பொருட்களை உடையது. தவிர தோலின் pH ratio எனப்படும் மில, கார அலகு, அமிலத்தன்மை அதிகமுள்ளதாக இருப்பதால் பல கிருமிகள் தோலில் படிந்து வளர்ச்சியடைய முடியாது. ஆனால் அக்குள்களிலும், தொடையும், அடிவயிறும் சேரும் பாகங்களில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், இந்த இடங்களில் சுலபமாக நுண்ணுயுர்கள் தாக்கி, படை, சொறி, அரிப்பு இவற்றை உண்டாக்குகின்றன.
சர்மத்தை பாதிப்பவை
அரிப்பு, (Itching) தொற்றில்லாத கரப்பான், சினைப்பு ((Non – Infectious Rashes) பொதுவான அரிப்பு, டெர்மடைடீஸ் சோரியாசிஸ் முதலியன.
முகப்பரு
அழுத்தத்தால் ஏற்படும் புண்கள் (Pressure Sores)
வியர்வை பிரச்சனைகள்
நிறமூட்டி (Pigment) கோளாறுகள் – இதில் அல்பினிஸம் ((Albinism),
விடிலிகோ, மெலாஸ்மா இவை அடங்கும்.
பாக்டீரியாவால் வருபவை – இதில் சீழ் கொப்புளங்கள் (Impetigo Contagiosa), ஃபர்னங்கிலஸ் (Furnuncles), ஃபாலிக்குலைடீஸ் (Folliculites), தோல் கட்டிகள், கொப்பளங்கள், செல்லூலைட்டீஸ் (Cellulites).
புல்லுருவிகளால் (Parasite / Protozoa) தொல்லை முதலியன.
வைரஸால் வருபவை (Viral Infections) – மரு, பாலுண்ணிகள், ஹெர்பஸ் தொற்று போன்றவை.
சூரிய வெப்பத்தால் ஏற்படுபவை.
வயது இவற்றை
அரிப்பும் உலர்ந்த தோலும்
உலர்ந்த, செதில் செதில்களாக தோலுரியும் சர்மம், எல்லா வயதினர்களுக்கும் ஏற்படும். குறிப்பாக 60 வயதிற்கு மேலிருப்பவர்களுக்கு எண்ணைப்பசை குறைவால் தோல் அரிப்பு ஏற்படும்.
அரிப்பும் தொற்றில்லா சினப்புகள் (Non Infection Rashes) – உடலின் அரிப்பு ஏற்படுவது சகஜம். உடலின் நோய் தடுக்கும் / எதிர்க்கும் சக்தியின் பிரதிபலிப்பாக கூட அரிப்புகள் ஏற்படும். அரிப்பைத் தவிர Rashesஎனப்படும் சினப்புகளில் சில சிறுவர்களுக்கும் சில வயது வந்தவர்களுக்கும் கூட இரத்த பரிசோதனையால் காரணம் தெரியாமல் போகலாம்.
அழுத்தப் புண்கள் / படுக்கை புண்கள் (Pressure Sores / Bed Sores) – படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்கள் இதில் அடங்கும்.
பாக்டீரியாவால் வருபவை
பாக்டீரியா இனத்தை சேர்ந்தது ஸ்டபைலோகோகஸ் Staphylo Coccus) என்ற பாக்டீரியா. திராட்சை கொத்துகள் போல் கூட்டமாக இருக்கும். இந்த இனத்தின் ஒரு பிரிவான Staphylo Coccus Aureus சர்மத்தில் அதிகம் காணப்படும். இதனால் பல தோல் தொற்று வியாதிகள் ஏற்படுகின்றன.
சீழ் கொப்புளங்கள் (Impetigo Contagiosa) – இந்த பாதிப்பு குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் அதிகம் நேரிடும். குழந்தைகள் மண், புழுதிகளில் விளையாடுவதால் சுலபமாக தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.
முடிக்கால் உறைகளின் அழற்சி Folliculitis) – சாதாரணமாக எல்லோருக்கும் வரும் இந்த அழற்சி, பல பிரிவுகளாக சர்மத்தை பாதிக்கிறது. முடிக்கால் உறைகள் Hair Follicles) பாதிக்கப்பட்டு, முடி இழப்பு ஏற்படும். முடி வளரும் நுண்ணிய உறைகளை சுற்றி வெள்ளை நிற சிறிய கட்டிகளாக தோன்றும். அரிப்பை உண்டாக்கும். சில சமயம் வலியும் இருக்கும் சிலருக்கு இந்த தொற்று தோன்றி தானாகவே மறையலாம்.
தோல் கட்டிகள் (Furuncles)
உடலில் கட்டிகள், சீழ் பிடித்தவை, வலியையும், வேதனையும் தருபவை. தோலடியுள்ள தந்துகிகள், நரம்பு நுனிகள் இவற்றையும் பாதிப்பதால் வலி இருக்கும். தோன்றும் காரணங்கள் பேக்டீரியா (Staphulo Coccus) – சுரப்பிகளையும், முடிக்கால் உறைகளையும் தாக்கும். உடலில், முடிக்கால்கள் தோலில் ஏற்படும் வெடிப்பு, ரத்தத்தில் மாசு, அசுத்தங்கள் படிவது.
இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.

Leave a Reply